சின்ன சேலம் கலவரம் | குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சின்ன சேலம் கலவரம் | குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்," கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன? சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை பள்ளிக் கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.