பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் ஜூலை 18, 19 மற்றும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று (15) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.