மும்பையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மும்பையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மும்பையில் குடியிருப்புக் கட்டடம், இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பெய்த கனமழை காரணமாக தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியிலுள்ள  6 அடுக்கு பழைய கட்டடமொன்று இடிந்து விழுந்தது.

குறித்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்ததுடன் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இதுவரையும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே கட்டட இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை படை தெரிவித்துள்ளது.

இதேவேளை  மும்பையின் புகா்ப்-  மால்வானியிலும்  மூன்றடுக்கு கட்டடமொன்று கன மழை காரணமாக நேற்று சரிந்து விழுந்தது.

இதன்போது குறித்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை, மீட்பு பணியினர்  காயங்களுடன் மீட்டனா். அதில் இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.