யாழில் பல சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்ட நபர் கைக்குண்டுடன் சிக்கினார்

யாழில் பல சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்ட நபர் கைக்குண்டுடன் சிக்கினார்

யாழ் மாவட்டத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைக்குண்டுடன் நேற்றிரவு கோப்பாய் பகுதியில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்மாவட்டத்தில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சின்னவன் எனப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பகுதியில் வைத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு தாலிக்கொடி,நான்கு சங்கிலிகள்,கைக்குண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.