உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்

இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் நாளை (ஜனவரி 2) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | Ministry Of Education Notice Gce Al Exam Date

இதேவேளை பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.