ஒகஸ்ட் மாதம் 10 திகதிக்குள் 20 இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர் – ராகுல் எச்சரிக்கை!
இந்தியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 திகதிக்குள் கொரோான வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 இலட்சமாக உயர்வடையும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பில் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 10 இலட்சத்தை தாண்டும் என கடந்த 14ம் திகதி தாம் பதிவிட்டிருந்ததாகவும், அதேபோல் தற்போது 10 லட்சத்தை கடந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தால் ஒகஸ்ட் 10ம் திகதிக்குள் இந்தியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆதலால் கொரோனா தொற்று பரவலை தடுக்க உறுதியான திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.