அடிக்கும் வெயிலில் வியர்வை நாற்றத்தை போக்க எளிய வழிமுறை

அடிக்கும் வெயிலில் வியர்வை நாற்றத்தை போக்க எளிய வழிமுறை

வெயில் மற்றும் கொளுத்தும் வெப்பம் அனைவரையும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் பலருக்கும் தோல் சம்பந்தமான பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.

மேலும், பலருக்கும் உடலில் அதிக வியர்வை வெளியேறக்கூடும், இதன் காரணமாக அக்குள் ஈரமாகி, இந்த பகுதி துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

சிலருக்கு இது மிக அதிகமாக இருக்கும். உடல் துர்நாற்றம் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

தக்காளி
முதலில் தக்காளிச் சாற்றை எடுத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து அக்குளில் தடவி காய விடவும்.

சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.

பேக்கிங் சோடா
அடுத்ததாக, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு பல பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு பொருட்களையும் கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். பின் அதை அக்குள்களில் தடவவும். இது அக்குளில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு ஆனது வியர்வையின் நாற்றத்தை நீக்குவதில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கைத் துண்டுகளாக நறுக்கி, அதனை அக்குள்களில் தேய்த்தால், அதன் பலனை விரைவில் உணர்வீர்கள்.                                              

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யை அக்குள்களில் தடவி அரை மணி நேரம் விட்டு, சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர், ஆப்பிள் வினிகர் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அக்குள் துர்நாற்றத்தை நீக்கும். இதனை தடவி பிறகு சிறிது நேரம் அப்படியே விட்டு, பிறகு கழுவவும்.