தங்கம் கடத்திய வழக்கில் மலையாள சினிமா தயாரிப்பாளர் கைது

தங்கம் கடத்திய வழக்கில் மலையாள சினிமா தயாரிப்பாளர் கைது

வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு 2.23 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் மலையாள சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

துபாய் நாட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு இறைச்சி வெட்டும் எந்திரம் ஒன்று பார்சலில் கொண்டு வரப்பட்டது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது எந்திரத்திற்குள் 2.23 கிலோ தங்கம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பார்சலை வாங்க வந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் அந்த பார்சல் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பதை விசாரித்த அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் சிராஜூதின் மற்றும் ஷபின் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் இதற்கு முன்பும் இதுபோல தங்க கடத்தலில் ஈடுபட்டார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.