இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 35 ஆயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்தியாவில் மொத்தமாக 10 இலட்சத்து 5 ஆயிரத்து 637 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன் புதிதாக 680 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 6 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள அதேவேளை 3 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 549 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 369ஆக உயிர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.