விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்! வைரலாகும் விபத்து புகைப்படம்

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்! வைரலாகும் விபத்து புகைப்படம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் மற்றும் ஷகிலாவின் மகள் மிலா என மூன்று பேர் கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.

நடிகை ஷகிலா திருநங்கையான மிலா என்பவரை தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வருவது பலரும் அறிந்ததே. மிலா அவ்வப்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளுடன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல குடும்பங்களில் வீட்டில் ஆண்கள் சரியில்லாமல் பெண்கள் படும் அவஸ்தையை அருமையாக விளக்கியுள்ளது.

இந்நிலையில் மிலாவும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா, மீனா என 3 பேரும் அண்மையில் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி அருகே அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் மிலாவிற்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது, மற்ற இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லையாம்.

தற்போது காரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.