மண்டைதீவு கடலில் இன்று நடைபெற்ற சம்பவம் -இரண்டு இளைஞர்கள் கைது

மண்டைதீவு கடலில் இன்று நடைபெற்ற சம்பவம் -இரண்டு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக சென்ற படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது அதில் சந்தேகத்துக்கிடமான முறையில் மூடைகள் வைக்கப்பட்டுள்ளன.அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட 111 கிலோ கஞ்சாவையும் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஊடாக கடற்படையினர் பாரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.