கூகுள் மேப்பில் இனி டோல்கள், சிக்னல்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம்
இந்த அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டவுள்ளது. பிறகு மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியை இன்று பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப்பை பயன்படுத்தினால் போது சரியாக சென்று சேர்ந்துவிடலாம்.
இந்த கூகுள் மேப்பில் புதிய அம்சங்களை கூகுள் கொண்டு வரவுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல் கேட் இருக்கிறது என காட்டப்படும். இதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என தெரிந்துகொள்ளலாம். இந்த அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டவுள்ளது. பிறகு மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
இதற்காக உள்ளூர் டோல் அதிகாரிகளிடம் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல டோல் இல்லாத சாலையை நாம் தேர்ந்தெடுத்துகொள்ளும் வகையில் மேப்பில் வசதி இடம்பெறும்.
அதேபோல கூகுள் மேப்பில் சாலைகளில் உள்ள சிக்னல்களும் இனி காட்டப்படும். சிவப்பு சிக்னல் போடப்பட்டிருக்கிறதா, பச்சை சிக்னல் போடப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
மற்றொரு அம்சத்தில் சாலையில் உள்ள கட்டிடங்களின் அமைப்புகள் துல்லியமாக காட்டப்படவுள்ளது. இதன்மூலம் நாம் சாலை விரிவாக உள்ளதா, குறுகிய சாலையா, சாலையில் எவ்வளவு இடம் உள்ளது என்பதை காண முடியும்.