வார இறுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு - PUCSL அறிவிப்பு

வார இறுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு - PUCSL அறிவிப்பு

எதிர்வரும் வார இறுதி நாட்கள்களில் நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமையன்று இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.