சாகுபடி பயிர்களை அழித்து போலீஸார் அத்துமீறல்!!! பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயக் குடும்பம் தற்கொலை முயற்சி!!!

சாகுபடி பயிர்களை அழித்து போலீஸார் அத்துமீறல்!!! பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயக் குடும்பம் தற்கொலை முயற்சி!!!

மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்ததாகக் கூறி போலீஸார் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை ஜேசிபி வாகனம் கொண்டு அழித்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த ஜுலை 14 ஆம் நடந்ததாகவும் அப்போது அந்நிலத்தில் பயிர் சாகுபடி செய்திருந்த தலித் விவசாயக் குடும்பம் தனது குழந்தைகளுடன் அதிகாரிகளுக்கு முன்பு பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதகாவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்த சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

குணா பகுதியில் உள்ள குறிப்பிட்ட நிலத்தில் விவசாயக் குடும்பம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். அந்நிலம் அரசுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. அந்நிலத்தில் உள்ளூர் நிர்வாகம் மாதிரி கல்லூரி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதனால் நிலத்தை காலி செய்யும் முயற்சியில் தாசில்தார் முதற்கொண்டு ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பகுதியின் தாசில்தார் நிர்மல் ரத்தோர் நிலத்தை அளவிட்டு குறியீடு செய்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிக் குடும்பம் அந்நிலத்தை காலி செய்யாமல் இருந்த நிலையில் போலீஸார் ஜேசிபி வாகனம் கொண்டு நிலத்தில் உள்ள பயிர் முழுவதையும் நாசம் செய்தனர். இச்சம்பவம் கடந்த ஜுலை 14 ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

பயிர்களை அழிக்கும் போது விவசாயி ராஜ்குமார் மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் முதற்கொண்டு பயிர்களை அழிக்க வேண்டாம் என கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தொடர்ந்து விளைநிலத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் அழித்து நிலத்தை அளவிட்டதாகவும், இதற்கிடையில் விசவாயி ராஜ்குமார், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தால் விவசாயக் குடும்பத்தினர் மீது போலீஸார் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது.

தற்கொலை முயற்சிக்குப் பின்பு விவசாயக் குடும்பத்தை அருகில் உள்ள மருத்துவமனையில் போலீஸார் சேர்த்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐ.ஜி சிங் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோக்கள் கிளிப்பிங் செய்யப்பட்டது. நிலத்தை அளவிடும்போது எதிர்த்ததால் தான் போலீஸார் அவர்களை அடித்து இருக்கின்றனர். உள்ளூர் மக்களை கவரும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விஷயங்கள் பகிரப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்ததால் ஜுலை 15 ஆம் தேதி குணா பகுதியின் எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இச்சம்பவத்தால் மத்தியப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவராஸ் சிங் தலைமையில் அமைக்கப்பட்டள்ள ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதைத்தவிர விவசாயக் குடும்பத்தினர் மீது காவல் துறையை பணி செய்யவிடாமல் தடுத்தது, காவல் துறையினரை தாக்கியது என்று 353, 309 போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் மேலும் அப்பகுதி மக்களிடையே இந்த விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALERT: GRAPHIC CONTENT
In MP's Guna, a Dalit farmer couple consumed pesticide in front of his children, police officials after Guna authorities started destroying their crops with a JCB to evict them from a govt-owned land. My report for @TheQuint https://t.co/jA76YX9Vru

— Asmita Nandy (@NandyAsmita) July 15, 2020

मध्यप्रदेश के गुना में @ChouhanShivraj जी की पुलिस द्वारा गरीब दलित किसान परिवार के साथ हुई बर्बरता की जितनी निंदा की जाए कम है।
गरीब किसान की फसल पर JCB चलाया जा रहा था पिता ने कीटनाशक पी लिया, फिर भी पुलिस का दिल नही पिघला खूब लाठी डंडे चलाए।
वाह शिवराज जी वाह pic.twitter.com/4YVawkI5sx

— Devashish Jarariya (@jarariya91) July 15, 2020