தோட்ட வீடமைப்பு திட்டத்துக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 18 பேர் கைது
தலவாக்கலை வட்டகொட பகுதியில் தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலவாக்கலை ஒஸ்போன் தோட்டத்தில் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இருபது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டுத் திட்டத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சட்டவிரோதமாக மின்சாரம் பெற பயன்படுத்தப்பட்ட பல மின் கம்பிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (20) நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.