இந்தியா-ஐரோப்பிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மேம்பட செயல்சார்ந்த நடவடிக்கைகள் தேவை – மோடி

இந்தியா-ஐரோப்பிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மேம்பட செயல்சார்ந்த நடவடிக்கைகள் தேவை – மோடி

இந்தியா-ஐரோப்பிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு செயல்சாா்ந்த நடவடிக்கைகள் அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான 15-ஆவது மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (புதன்கிழமை)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “இந்தியாவும்,  ஐரோப்பிய நாடுகளும் இயற்கையாகவே நட்புறவு பாராட்டி வருகின்றன. இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனை சோ்ந்த 27 நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பானது  உலகில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ பெரும் பங்கு வகித்து வருகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் உலகமயமாதலை மேம்படுத்தவும் இந்த ஒத்துழைப்பு உதவும். இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு செயல்சாா்ந்த திட்டங்களை விரைந்து வகுக்க வேண்டும்.

அவற்றை உரிய காலத்தில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்த இந்தியா தயாராகவுள்ளது. அதற்கான நீண்ட கால உத்தி சாா்ந்த திட்டங்களை வகுக்கவும் இந்தியா உறுதி கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.