ஐ.நா சமூக கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்
ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
குறித்த கூட்டம் இன்று வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர்.
இது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் “கொரோனா பரவலால் உலகளவில் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘
பல நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற பல நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது பற்றி கூட்டத்தில் பேசப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஆசிய – பசிபிக் நாடுகள் சார்பில் இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக ஒரு மனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.