ஒரு மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் தாயும், மகனும் கைது
தலைமன்னாரில் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை கடத்திய தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.