புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு :ஒரேநாளில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு :ஒரேநாளில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில்  புதிய உச்சமாக 32 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் மொத்தமாக 9 இலட்சத்து 70 ஆயிரத்து 169 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் புதிதாக 614 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 6 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள அதேவேளை 3 இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தடுப்பூசி 1000 பேருக்கு செலுத்தி பார்க்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முதலில்  இரண்டு  கட்டமாக  தடுப்பூசி மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்துள்ளதாக  அந்நிறுவனம் தெரித்துள்ளது.

இந்த இரண்டு  கட்ட மருத்துவ பரிசோதனையின்போதும்   தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை,  சகிப்புத்தன்மை,  நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை சோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி சோதனை ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.