மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாதீடு 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த இரண்டு தடவைகள் பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில்,புதிய தவிசாளராக தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய மன்னார் பிரதேச சபையில் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.

இதன் போது புதிய தவிசாளர் தெரிவிற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும் தவிசாளர் தெரிவிற்கு வேறு எந்த உறுப்பினர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.