உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

உலகில் முதன்முறையாக பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பால்டிமோர் நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயதுடைய நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயம் மாற்றப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் நீண்டகாலமாக உயிர் பிழைத்திருப்பார் என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது என்று மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.