கால்வாயில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு
கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய வளாகத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.