மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு
மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று மீண்டும் வழமைபோல் இடம்பெறுவதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற தொடருந்து ஹாலிஎல தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முற்பகல் தடம்புரண்டது.
இதனால் மலையகத்திற்கான தொடருந்து சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த தொடருந்து பாதை நேற்றிரவு சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மீண்டும் தொடருந்துகள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.