காதலியின் உறவினர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் - 7 பேர் வைத்தியசாலையில்

காதலியின் உறவினர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் - 7 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞர் ஒருவர் அவரது குழுவினருடன் பெண்னின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும், அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தறவு கொடுத்து வந்துள்ளதாகவும் இதனையடுத்து இருவரது உறவினருக்கிடையே இரண்டு தடவைகள் கைகலப்புக்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இருபக்கமும் சமாதானமாக சென்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று (09) இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.