சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் தரைமட்டம்

சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் தரைமட்டம்

தமிழகம், சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்கு குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டமொன்று நேற்று (27) இடிந்து விழுந்ததில், 24 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்ததை அறிந்து, மக்கள் வெளியேறியமையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

தற்போது, கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை வீர‌ர்கள், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் தேடிவருகின்றனர்.