திருக்கோவில் சம்பவம் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மிகவும் துரதிஷ்டவசமான முறையில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல் காதர், ஏ. நவிநாத், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.