LPL T20 இறுதிப் போட்டியில் காலி அணி...

LPL T20 இறுதிப் போட்டியில் காலி அணி...

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணியை தோற்கடித்தே காலி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.