![](https://yarlosai.com/storage/app/news/51bcd9c3099eb7c3d0f9a208a40c5829.jpg)
கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம் குறித்த கட்டடம் எந்தவிதமான கட்டடம் உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.