
கொரியன் நாட்டு மக்களின் உணவு கலாச்சாரம்: பலரும் அறிந்திடாத ஆச்சரிய உண்மை
கொரியர்கள் உணவு கலாச்சாரம் அற்புதமான ஒன்று.
வயதில் பெரியவர் ஒருவர் முதலில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப் ஸ்டிக்கை கையில் எடுத்த பிறகுதான் மற்றவர்கள் சாப்பிட உட்காருவார்கள்.
கையினால் சாப்பிடக் கூடாது. ஸ்பூன், சாப்ஸ்டிக் பயன்படுத்தியே உண்ண வேண்டும்.
இருமல், மூக்கு சீரல் வந்தால் டைனிங் ஹாலை விட்டு அடுத்த அறைக்கு போய்விடுவார்கள்.
பக்கத்திலுள்ளவர்களின் டம்ளரில் பானம் பாதி அளவு குறைந்துவிட்டால் நீங்கள் ஊற்றி நிரப்ப வேண்டும். உங்களுக்கு பக்கத்திலுள்ளவர் ஊற்றுவார்.
சூப் பவுல், உணவு தட்டு எதையும் கையில் வைத்து உண்ணக் கூடாது. தட்டுகளை டேபிளில் வைத்து சற்று குனிந்து சாப்பிடுவார்கள்.
தான் சாப்பிடும் அளவு மட்டுமே தட்டில் எடுப்பார்கள். எதையும் வீணாக்க மாட்டார்கள்.
அவரவர் சாப்பிட்ட தட்டை (Plate) கழுவி வைத்துவிடுவார்கள்.
விருந்தின் முடிவில் விருந்து வழங்கியவரிடம் masegaemugusuyo (I ate well) என்று சொல்லிவிட்டு விடைபெறுவார்கள்.