கொரோனா வைரஸ் – இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு!

கொரோனா வைரஸ் – இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 29,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 37 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்று காரணமாக  588 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 80 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 இலட்சத்து 20 ஆயிரத்து 92 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 8,944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களாக தொடர்ந்தும் மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி போன்றவை விளங்குகின்றன.

மகராஷ்டிராவில் இதுவரையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  2 இலட்சத்து 67 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.