பாலாஜியுடன் ஷிவானியின் கொண்டாட்டம்: வெளியான நெருக்கமான புகைப்படம்!

பாலாஜியுடன் ஷிவானியின் கொண்டாட்டம்: வெளியான நெருக்கமான புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன்.

விஜய் டிவி நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பாலாஜி முருகதாஸ் மீது காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் காதல் இல்லை என கூறினார்.

இப்படியான நிலையில் தற்போது பாலாஜி முருகதாசின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷிவானி நாராயணன் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஷிவானியின் இடுப்பில் கைவைத்தபடி பாலாஜி முருகதாஸ் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.