மாணவர்களின் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையை துரிதப்படுவதற்காக அரசாங்கம் கவனம் செலுத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. 'சிசு செரிய' பாடசாலை போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் குறைத்து, சிறந்த போக்குவரத்து முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அவ்விடயம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிக் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை சீராக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் போக்குவரத்தின் போது ஏற்படும் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தல், மாணவர் போக்குவத்தில் ஈடுபடுவோரின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் மற்றும் அதை ஒரு பொறுப்பான சேவையாக மாற்றுதல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வரைவு விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அதில் உள்ள விடயங்கள் மற்றும் அவற்றில் சேர்க்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தே இங்கு விவாதிக்கப்பட்டது.