பூனையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி

பூனையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி

பூனை ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்படுவதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெ?ளியானமை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, வாலப்பேன் காவல்துறையினர் 26 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

பூனை துன்புறுத்தப்படும் காணொளி பரவியதையும், விலங்கு நலக் குழுக்களின் கடும் எதிர்ப்புகளையும் தொடர்ந்து, பிப்ரவரி 8 ஆம் தேதி வீடியோவில் காணப்பட்ட சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

பூனையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி | Walapane Man Arrested Video Of Cat Abuse

கைதான சந்தேக நபர் திப்பட்டுகொடவைச் சேர்ந்த 26 வயதுடைய மெக்கானிக் ஆவார். சந்தேக நபர்  வாலப்பேன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 24 ஆம் தேதி வரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சந்தேக நபரின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அறிக்கை கோரியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.