நாளை மறுதினம் சந்திர கிரகணம்! யார் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படப் போகின்றார்கள் தெரியுமா?

நாளை மறுதினம் சந்திர கிரகணம்! யார் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படப் போகின்றார்கள் தெரியுமா?

2021 நவம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் சந்திர கிரகணம், இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்த சந்திர கிரகணங்களில் இருந்து வேறுபட்டது.

ஏனெனில் இந்த சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.

நவம்பர் 19 ஆம் தி நடக்கும் சந்திர கிரகணத்தால் சிலருக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கும்.

இப்போது சந்திர கிரணத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.   

மேஷம்

புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.  நீங்கள் தொழிலில் சில நல்ல வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். எனவே அதை தவறவிடாதீர்கள். ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

ரிஷபம்

 உங்கள் செலவுகளை கண்காணியுஙகள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுஙகள். இல்லாவிட்டால், நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனையால் அவதிப்படலாம்.

மிதுனம்

ஆன்மீக ரீதியில் உங்களை நீங்களே உணர்வீர்கள் மற்றும் தியானத்தில் மன அமைதியை காண்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, நாள் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, விஷயங்கள் நன்றாக இருக்கும்

கடகம்

இந்த கிரகணம் உங்கள் ராசியின் 11 ஆவது வீட்டில் நடக்கிறது. இந்த வீடு நட்பைக் குறிக்கிறது. எனவே உங்கள் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட நினைத்தால், அதற்கு இது சிறந்த நாள்.

சிம்மம்

முடிவுகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தமின்றியும் இருப்பார்கள்.

கன்னி

இந்த சந்திர கிரகணத்தின் போது நீங்கள் உங்கள் இதயம் சொல்வதைக் கேட்டு பின்பற்றி நடந்தால் வெற்றி கிடைக்கும். எனவே நீங்கள் எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இதுவே சிறந்த நேரம்.

துலாம்

இந்த சந்திர கிரகணம் உங்கள் ராசியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். வேலையைப் பொறுத்தவரை, கடின உழைப்பிற்கான வெகுமதியைப் பெறுவீர்கள். நிதி சிக்கல்கள் தீர்ந்து லாபத்தைப் பெறுவீர்கள்.

இருப்பினும், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

இந்த கிரகணத்தில், நீங்கள் உறவுகளின் வலுவான உணர்வை உணர்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், கவனமாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

தனுசு

இந்த கிரகணம் உங்களை மீண்டும் சிறப்பாக செயல்பட உதவும். உங்களை நீங்களே கவனித்துக் கொள்வீர்கள் மற்றும் மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இந்நாள் இனிமையாக இருக்கும்.  

மகரம்

 நீங்கள் உங்கள் காதல் மறைந்துவிட்டதாக உணர்ந்தால், இழந்த காதலைத் தூண்டுவதற்கு இதுவே சரியான நேரம். வேலையைப் பொறுத்தவரை, விஷயங்கள் இனிமையாக இருக்கும். 

கும்பம்

 நிதி ரீதியாக, விஷயங்கள் சீராக இருக்கும். வேலையில், நீங்கள் சில புதிய பொறுப்புகள் மற்றும் உங்கள் செயல்திறனுக்கான பாராட்டைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் பெரிய அளவு பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், உங்கள் முடிவை இறுதி செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்.

மீனம்

பதவி உயர்வைக் கூட பெறலாம். இருப்பினும், நீங்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நிதி ரீதியாக, கடன்கள் தீர்க்கப்படும்.