இன்றைய ராசி பலன் 18 அக்டோபர் 2026

இன்றைய ராசி பலன் 18 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். பண விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்யும் உகந்த நாள். குடும்பத்தில் உங்கள் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் குடும்ப மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். ஆரோக்கியத்தில் சிறிய சோர்வு சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் யோகா தியானம் உதவும் ஆன்மீகத்தில் துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பாகும். மற்றவர்கள் உங்கள் கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளதால், பேசும்போது கவனமாகவும் நிதானமாகவும் இருக்கவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தாமதம், சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை தேவை. பணம் விவகாரங்களில் செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட் திட்டம் அவசியம். குடும்பத்தில் உங்களுடைய உறவினர்களுக்கான மனக்கசப்பு ஏற்படும். பணியிடத்தில் லாபமும் முன்னேற்றமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், சில விஷயங்களில் உங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும் ஜீரண பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதனால் உணவில் கவனம். ஆன்மீகத்தில் நாட்டம் மற்றும் விநாயக வழிபாடு நல்லது.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி நேயர்களே இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களுடன் செயல்படுவீர்கள். பணம் செலவு அதிகரிக்கலாம். குறிப்பாக பயணச் செலவுகள் ஏற்படும்.குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக மன அழுத்தம் குறையும். குடும்பத்தில் அன்பும் இணக்கமான சூழலும் நிலவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமான தருணங்களால் நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் குரு வழிபாடு நல்ல பலன் தரும். குழந்தைகளுடன் தொடர்புடைய விஷயங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் வெற்றி, முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும் என்பதால் சேமிப்பு சாத்தியம். ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும். இன்று உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல நிலைஇருக்கும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். தந்தையிடமிருந்து ஆதரவு கிடைக்கும். சமூகத் தொடர்புகள் விரிவடையும். குடும்ப விவகாரங்கள் தொடர்பாகச் சில கவலைகள் ஏற்படலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தாமதம் குழப்பம் ஏற்படக்கூடிய நாள். பண விஷயத்தில் எதிர்பாராத செலவுகள் சந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் மன குழப்பத்தை தர வாய்ப்புகள் உண்டு. உங்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் கவனமாக இருக்கவும். மனம் புதிய யோசனைகளால் நிறைந்திருக்கும்; சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கலாம்.. ஆரோக்கிய சுமாராக இருக்கும். சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகள் தொந்தரவு தரும். ஆன்மீகத்தில் சூரிய வழிபாடும் நல்லது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எங்களுக்கு தொழிலில் வேலைப்பாடு அதிகரிக்க கூடிய நாள். எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கும். இதனால் செலவுகள் திட்டமிடல் தேவை. குடும்ப பொறுப்புகளை முடிப்பதில் கவனக்குறைவு வேண்டாம். இது உங்களுடைய மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் துணையுடன் நெருக்கமான தருணங்களைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சவால்கள் வெற்றி சாத்தியம். இன்று நீங்கள் விஷ்ணு வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பான போட்டி எதிர்கொள்வீர்கள். சவால்களில் உங்கள் சாமர்த்தியதால் வெற்றி சாத்தியம். பணம் தொடர்பான சிறிய லாபம் கிடைக்கும். லாபமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். உங்களுடைய குடும்பத்தில் திருமணம், சுப காரியங்கள் போன்ற விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் துணையுடன் நெருக்கமான, இனிமையான நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். கூட்டணி தொடர்பான முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.ஆரோக்கியத்தில் நல்ல நிலை இருக்கும். ஆன்மீகத்தில் லட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனமா இருக்க வேண்டிய நாள். பண விஷயங்களில் செலவ அதிகரிக்கும். குடும்பத்தில் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பதில் நன்மை தரும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனைகள் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. அந்நியர்களைக் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். ஆன்மீகத்தில் சுப்ரமண்யர் வழிபாடு நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக பணி சுமை ஏற்படும் இது உங்களுடைய உடல் சோர்வை அதிகரிக்கும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். பழைய நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைத்தாலும், போட்டியாளர்களிடமிருந்து சவால்களையும் சந்திக்க நேரிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுடைய பண வரவு குறையும். குடும்பத்தில் அமைதியை பேணுவது அவசியம். இன்று குரு வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
 

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்ப விவகாரங்களிலும், தொழில் தொடர்பான விஷயங்களிலும் எதிர்பாராத சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும்.பணம் விரயம் ஏற்படலாம்.குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபம் ஈட்டும் வாய்ப்பை அதிர்ஷ்டம் உங்களுக்கு வழங்கும். பழைய அறிமுகம் ஒருவருடன் தொடர்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. குருவின் பார்வையும் ஒட்டுமொத்தமாகச் சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் சமூக வட்டம் விரிவடையும். ஆன்மீகம் சிவ வழிபாடு.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள், முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் தந்தையிடமிருந்து ஆதரவும் நன்மைகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல நிலை இருக்கும். இதனால் நீங்கள் திட்டமிட்ட செயல்களை சரியாக செய்து முடிக்க முடியும். ஆன்மீகம் சிவன் வழிபாடு சிறப்பு.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் முன்னேற்றம், அதன் மூலம் பண விவகாரங்களில் லாபம் சேமிப்பு சாத்தியப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை ஏற்படக்கூடிய நாள். பயணங்கள் மேற்கொள்ளவும், சுப காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. வேலைகள் வழக்கம்போலச் செல்லும், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத வேலைகளால் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். ஆன்மீகம் விஷ்ணு வழிபாடு சிறப்பு.