
குருபெயர்ச்சி பரிகார பலன்கள்: இந்த 6 ராசிக்காரங்க கஷ்டபடாம இருக்க கட்டாயம் செய்யணுமாம்
பொன்னான கிரகம் குரு பகவான். சுப கிரகமான குருவின் பார்வை பட்டால் யோகங்கள் கை கூடி வரும் எனவேதான் குரு பார்வை கோடி நன்மை என்று சொல்கின்றனர்.
குரு பகவான் சஞ்சாரம், பார்வை சில ராசிக்காரர்களுக்கு நன்மை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களைத் தரும்.
குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார்.
பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. 5 மாதங்கள் குரு பகவான் கும்ப ராசியிலும், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார் குருபகவான்.
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கெள்ளலாம்.
ரிஷபம்
பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்கின்றார். பத்தில் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள். நிதானமும் பொறுமையும் தேவைப்படம் இந்த காலத்தில் அவசர முடிவினை எடுக்க வேண்டாம்.
குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால், பணவரவு அதிகரிக்கும், போராட்டங்கள் முடிவுக்கு வருவதோடு, அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நீங்கள் பொருளாதாரத்திலும் உயருவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயம் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கும். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற உள்ள குரு பெயர்ச்சியாகத்தில் பங்கேற்க பாதிப்புகள் நீங்கும்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் அஷ்டம ஸ்தானமான எட்டாவது வீட்டிற்கு செல்லும் குருபகவானால் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.
குருவின் பார்வையால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும்.
வீடு, சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மன அமைதி ஏற்படுவதுடன், வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்தகாலத்தில் வாங்கலாம்.
ஆனால் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வதை தவிர்க்கவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்... ஆனால் குழந்தைகள் ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
இந்த குரு பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மேதா தட்சிணமூர்த்தியை தரிசனம் செய்யலாம்.
கன்னி
இந்த ராசியினருக்கு குருபகவான் ஆறாவது வீட்டில் பயணம் செய்கின்றார். ஆறில் குரு வந்தால் கடன், நோய், எதிரி விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிம்மதியும் வரப்போகிறது. வீடு தொழில் மாறலாம் என்ற எண்ணம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதுடன், வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
செல்வமும் செல்வாக்கு அதிகரித்தாலும் உடல் ஆரோக்கியத்திலும் உணவிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் புதிததாக வாங்கலாம். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மூன்றாவது நபர்களிடம் கவனமாகப் பேசலாம். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கு நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம்.
விருச்சிகம்
நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குருவினால் இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் நீங்குவதுடன், உறவினர்களிடையே நேசம் அதிகரிக்கும்.
இந்த காலம் மிகவும் நல்ல கால கட்டமாக இருப்பதால், வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் இருக்கும் நிலையில், வீடு கட்ட முயற்சியும் செய்யலாம்.
திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைப்பதோடு, பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையே இருந்த பிரச்சினை நீங்கும்.
குருவின் பார்வையால் உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். ஆயுள் கண்டம் நீங்குவதுடன், மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும்.
செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் போது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தென்திட்டை குரு பகவானை தரிசனம் செய்து வணங்கலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம். குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம்.
தனுசு
தனுசு ராசியைப் பொறுத்த வரை குரு மூன்றாம் வீட்டில் பயணிக்கப்போகிறார். உங்கள் சொந்த விசயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தி விடும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் ஏமாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கூடும்.
வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகும். மன அமைதி அதிகரிக்கும் சுப காரியத்தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உங்கள் ராசிநாதன் குருவினால் நன்மைகள் ஏற்பட வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
குருபகவான் ஜென்ம ராசிக்கு வருகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் அதிபதி, லாப ஸ்தான அதிபதி. உங்கள் ராசிக்கு வருவது சிறப்பானதுதான்.
சொந்த ஊரில் இருந்து இடமாற்றம், வேலை தொழிலில் மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் தடைகள் நீங்கி வெற்றி அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்குவதுடன், பூர்வீக சொத்துக்களில் பிரச்சினை அகலும்.
வேலையில் இருந்தாலும் சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படும். பெரிய அளவில் முதலீடு செய்யவதை தவிர்ப்பதுடன், குடும்ப விடயங்களில் மூன்றாவது நபரை தலையிட விட வேண்டாம்.
வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. கண்களிலும் வயிற்றிலும் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. நகை, பணத்தை பத்திரப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது.