இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்!

இந்தியா – ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் பாகிஸ்தானின் வாகா எல்லையை திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு நாளை (புதன்கிழமை) முதல் வாகா எல்லை திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாகிஸ்தான் வழியே  பஞ்சாப் பகுதியில் உள்ள வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வருவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து குறித்த எல்லை கடந்த மூன்று மாதமாக மூடப்பட்டுள்ளமை குறமிப்பிடத்தக்கது.