கொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 7 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் புதிதாக 540 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 727 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 5 இலட்சத்து 72 ஆயிரத்து 112 பேர் குணமடைந்துள்ளதுடன் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 806 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.