பெயர் மாற்றம் பெறுகிறது ஃபேஸ்புக்?

பெயர் மாற்றம் பெறுகிறது ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக்’ நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு, அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் முதன்மையாக விளங்கும் ‘ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் போன்ற துணை நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அண்மைய காலங்களில் ஃபேஸ்புக் செயலிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்கா கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு செயலியில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற செயலிகளைப் பெற வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘த வெர்ஜ்’ என்ற இதழில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃபேஸ்புக்கின் வருடாந்த மாநாட்டில் மார்க் ஸக்கர்பர்க் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட ஃபேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் ஃபேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.

ஆனால், ஊகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என ஃபேஸ்புக் மறுத்துள்ளது.

மேலும் பெயரை மாற்றுவதால் அது ஃபேஸ்புக்கிற்கு பிரச்சினையைத் தான் ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.