ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் வெடிபொருட்கள் இருப்பதை உறுதிபடுத்தினார்கள்.

இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த பகுதியில் நேற்றைய தினம் (17)அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.