கேப்டன் ஆசாத் வாலா அபாரம்- டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் 129 ரன்கள் சேர்த்தது பப்புவா நியூ கினியா

கேப்டன் ஆசாத் வாலா அபாரம்- டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் 129 ரன்கள் சேர்த்தது பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியா அணியின் துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதித்துள்ளன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.

 

இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில், முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி, தனது சொந்த மைதானத்தில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்கிறது. 

 

 

டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். குறிப்பாக ஓமன் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் ஆசாத் வாலா, 56 ரன்கள் குவித்தார். சார்லஸ் அமினி 37 ரன்கள் சேர்த்தார். சேஸ் பாவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

 

அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

 

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது.