கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரானாவால் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தற்கொலை என்ற விபரீத முடிவை கையிலெடுக்கும் அளவிற்கு மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நொண்டி விளையாடுகின்றனர்.
இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது.
நோய்க்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இது போல மன அழுத்தம் போக்கும் சில முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.