கொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்!

கொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்!

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிக்கு இந்தியா தமது ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய யூனியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான் டெர் லயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் ஆற்றல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய யூனியனின் 15 ஆவது மாநாடு நாளை மறுநாள் இணையம் வழியாக நடைபெறவுள்ளது.  இதன்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.