ஐ.பி.எல். 2021 புள்ளிகள் பட்டியல் ஒரு பார்வை...

ஐ.பி.எல். 2021 புள்ளிகள் பட்டியல் ஒரு பார்வை...

ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

 

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று வரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 33 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 9 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற ஆறு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.

 

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. டெல்லி ஏறக்குறைய பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

 

 

மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 3 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

 

சி.எஸ்.கே. அணி வீரர்கள்

 

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகமிக முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே  வெற்றி பெற்றிருக்கும். அடுத்த ஐந்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படும்.  மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை பெற முன்னிலைப்படுத்திக் கொள்ளும்.