புத்தகக் கடைகள் ஏன் திறக்கப்பட வில்லை?

புத்தகக் கடைகள் ஏன் திறக்கப்பட வில்லை?

மீரிகம நகரில் மதுபானக் கடைகளுக்குச் சென்று மதுபானம் வாங்கும் நபர்கள் நேற்று (22) உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்திடம், "புத்தகக் கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் பார்களை திறக்க அனுமதி தருகிறீர்கள்?" என வினவியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்,

"புத்தகக் கடைக்கும் மதுக்கடைக்கும் இடையேயான தொடர்பை எங்களால் தெளிவாகக் காட்ட முடியாது. பார்களை திறப்பது தொடர்பாக சட்ட செயல்முறை இடம்பெறுவதால் இந்த நேரத்தில் எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. பொதுவாக புத்தகங்கள் பலரால் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. " என்றார்.