சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?

இன்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

 

இந்த நிலையில் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள டி. நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மே மாதம் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஆனால், இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.