ஸ்ரீலங்காவில் கொரோனா இரண்டாம் அலைக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - கமால் குணரத்ன
ஸ்ரீலங்காவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொக்காவில் இராணுவ முகாம் தாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும், அனைத்து மக்களும் அச்சமின்றி சந்தோசமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 2615 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்க்கது.