காதலிக்காக ஒன்று, பெற்றோருக்காக ஒன்று: ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்காக ஒரு திருமணமும் பெற்றோருக்காக ஒரு திருமணமும் என ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய சந்தீப்பின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. தாங்கள் ஏற்கனவே சந்தீப்புக்கு ஒரு பெண்ணை பார்த்து வைத்துள்ளதாகவும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை அடுத்து இது குறித்து அந்த கிராமத்தின் பெரியவர்கள் பஞ்சாயத்து செய்தனர். 3 குடும்பத்தினர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த இளைஞருக்கு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து கடந்த 8ஆம் தேதி ஒரே மேடையில் இரண்டு பெண்களுக்கும் அடுத்தடுத்து தாலி கட்டினார். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த திருமணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.