4 வயது சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை - மக்கள் கண் எதிரே நடந்த சம்பவம்

4 வயது சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை - மக்கள் கண் எதிரே நடந்த சம்பவம்

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள ராஜேந்திராபுரா கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி தொட்டரம்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் சந்துரு என்ற சந்திரசேகர் என்ற மகன் இருந்தான். ராஜேந்திரபுரா கிராமம் வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்திலேயே உள்ளது. நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டு முன்பு நின்று சிறுவன் சந்துரு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை திடீரென்று சந்துருவை கடித்து குதறியது.

பின்னர் சந்துருவை வாயில் கவ்வியபடி அங்கிருந்து ஓடியது. இதை பார்த்து கிராம மக்கள் சிறுத்தையை விரட்டி சென்றனர். அதற்குள் வனப்பகுதிக்குள் சிறுத்தை ஓடிவிட்டது. இந்த நிலையில், சிறுத்தை கடித்து குதறியதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தான். தங்களது மகனின் உடலை பார்த்து முனிராஜ், தொட்டரம்மா கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.