கைக்கால்கள் கட்டப்பட்டு வீதியில் வீசப்பட்ட பெண்!
கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பாழடைந்த வீதி ஒன்றில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் பதிவாகி உள்ளது.
பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை (08) அவரை இவ்வாறு வீசிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ரிமாலி பெர்ணான்டோ என்ற 31 வயதுடையவர் குறித்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி குளியாப்பிட்டி பிரதேசத்தில் இனந்தெரியாத சிலரால் முகத்திற்கு மிளகாய்த் தூள் தூவி முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.